STATE THIRAN TEAM REGARDING*
*6 - 9 ஆம் வகுப்பு*
*_திறன் சார்ந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளும் பதில்களும் வழிகாட்டுதல்களும்_*
*கேள்வி எண் : 1*
திறன் மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை திறன் மதிப்பெண் உள்ளீடு பகுதி மற்றும் வழக்கமாக காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதி என இரண்டு பகுதிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டுமா????
*பதில் : இல்லை*
திறன் மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு மட்டும் திறன் மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் பதிவு செய்தால் போதும் இரண்டு வேறு இடங்களில் பதிவிட வேண்டாம்
*கேள்வி எண் : 2*
திறன் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களுடன் இணைத்து தரவரிசை RANK கணக்கிட வேண்டுமா????
*பதில் : இல்லை*
திறன் மாணவர்கள் எழுதிய வினாத்தாள் வேறு மற்ற மாணவர்கள் எழுதிய வினாத்தாள் வேறு என்பதினால் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் இணைத்து தரவரிசை RANK கணக்கிட வேண்டாம்
*கேள்வி எண் : 3*
திறன் மாணவர்கள் காலாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பாட வாரியாக அடிப்படை கற்றல் விளைவு *BLO Basic Learning Outcome* அடைந்தார்களா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது
*பதில்*
ஒவ்வொரு பாடத்திலும் 70% மேல் பெற்ற மாணவர்கள் அந்த பாடத்தில் அடிப்படைக் கற்றல் விளைவு *BLO Basic Learning Outcome* அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்
*6 மற்றும் 7 ஆம் வகுப்பில் 60 மதிப்பெண்களுக்கு 42 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களும்*
*8 மற்றும் 9 ஆம் வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவருக்கும்* அடிப்படை கற்றல் விளைவு *BLO Basic Learning Outcome* அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்
_*BLO Basic Learning Outcome தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்*_
பாடவாரியாக அடிப்படைக் கற்றல் விளைவு *BLO Basic Learning Outcome* அடைந்த மாணவர்கள் *கேள்வி 3ல் உள்ளபடி இந்த பருவம் முதல் வழக்கமான பாடங்களை தொடரலாம்*
03.07.2025 அன்று அனுப்பப்பட்ட திறன் சுற்றறிக்கையில் திறன் Circular குறிப்பிட்டுள்ள பகுதி 2 இன்றியமையா கற்றல் விளைவுகள் *Critical Learning Outcome* வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும்
வாரத்திற்கு ஒரு பாடவே இல்லை என தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்திற்கு ஒரு பாட வேளையில் திறன் *CLO Critical Learning Outcome* வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் *திறன் மாணவர்களுக்கு வழக்கம் போல் தொடர்ந்து மாதாந்திர மதிப்பீடு நடத்தப்படும்*
*REPORT CARD*
திறன் மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின்பு மாணவர்களின் *Report card ஐ பதிவிறக்கம்* செய்து கொள்ள இயலும்

No comments:
Post a Comment