தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., உறுப்பினர்கள், தங்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகை பற்றிய விபரத்தை, உமாங் செயலி மற்றும் பி.எப்., இணையதளம் மூலம் எளிதாக அறியலாம்.
அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை, ஓரிடத்தில் பெற உதவும் உமாங் (UMANG app) செயலியில், பி.எப்., சேவையை தேர்வு செய்து, அதன் பின் ஊழியர்கள் சார்ந்த சேவைகள் பகுதியை அணுகுவதன் மூலம்இந்த தகவலை பெறலாம்.முதல் முறை பயனாளி என்றால் உமாங் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதே போல, பி.எப்., இணையத்தில் நுழைந்து, இ-பாஸ்புக் இணைப்பை, ‘கிளிக்’ செய்ய வேண்டும். இதே போல பி.எப்., இணையதளத்தில் நுழைந்து இ-பாஸ்புக் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். (https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp). இதன் பிறகு நிரந்தர கணக்கு (யு.ஏ.என்) எண் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். பின்னர் உறுப்பினர் ஐ.டியை கிளிக் செய்து பி.எப்., தொகை விபரத்தை அறியலாம்.உமாங் செயலி மூலமே குறுஞ்செய்தி அல்லது மிஸ்டு கால் மூலம், பி.எப்., தொகையை அறிந்து கொள்ளும் வழிமுறையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நிரந்தர கணக்கு எண் உள்ளவர்கள், பதிவு செய்த மொபைலில் இருந்து, 77382 99899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் கோரிக்கைஅனுப்பி, தகவல் பெறலாம்.நிரந்தர கணக்கு எண்ணிற்கான, யு.ஏ.என் வலைவாசலில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள், 011 -2290 1406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும், தகவல் பெறலாம். இதன் மூலம், பி.எப்., தொகை மற்றும் கடைசியாக செலுத்தப்பட்ட தொகையை அறியலாம்.
No comments:
Post a Comment