*அரசுப்பள்ளியில் அசத்தும் முன்னோடித்திட்டம்*
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இப்படி ஒரு பள்ளியா?அதுவும்
ஓர் அரசுத் தொடக்கப்பள்ளியில் இப்படி ஒரு திட்டமா? என வாய்பிளக்க வைக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மேலூர் தொடக்கப்பள்ளி..
கல்வியாண்டு இறுதியில் 5 வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 10000 ரூபாயும்,
இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு 5000 ரூபாயும்,
மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு 3000
மற்ற வகுப்புகளுக்கு முதலிடம் 5000 ரூபாயும், இரண்டாமிடம் 3000 ரூபாயும்,
4000 ,2500 என வழங்கப்படும் திட்டம் இந்த ஆண்டுவிழா மேடையில் தொடங்கப்பட்டு ,
வைப்புநிதியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பு சேரவேண்டிய மாணவர்கள் 20 நபர்களை ஏப்ரல் மாதமே பள்ளியில் கொண்டுவந்து சேர்த்த பள்ளி..
பணம்கட்டி படிக்கும் நிலைமாறி, நன்றாகப் படித்தால் பள்ளியிலேயே ஊக்கத்தொகையினை தன்னார்வலர்களிடம் பெற்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.கிறிஸ்டியும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களும் இப்பள்ளிக்கு அல்ல, கல்வித்துறைக்கே வரம்..
இதுபோன்ற பள்ளிகள் இன்னும் பெருகட்டும்..
இப்பள்ளியின் பிற சிறப்புகள்..
*இரண்டு கட்டிடங்களுக்கு குளிர்சாதன வசதி*
*புதிய கற்பித்தல் மாதிரிப் பள்ளி*
*படைப்போம் பசுமைகிராமம் திட்டத்தில் ஆண்டிற்கு 10 தங்கமூக்குத்தி வழங்கும்பள்ளி*
*10 கிமீ அப்பால் இருந்து பஸ் பாஸ் பெற்று 19 மாணவர்கள் வந்து பயிலும் பள்ளி*
*மிகச்சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவைக்குழுவை கொண்டிருக்கும் பள்ளி*
*வருடம்தோறும் ஊர்ப்பொதுமக்களிடம் இருந்து கல்விச்சீர் பெறும் பள்ளி*
இப்பள்ளியோடு இணைந்து பயணிப்பதில் எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல,
பெருமையும் தான்
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

No comments:
Post a Comment