நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்புஇளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை
பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டிருந்தது. அதன்படி, தேர்வானது ஜூலை 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கால அவகாசம் நீட்டிப்பு: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப்.5) கடைசி என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான இந்த கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்த ஏப்ரல் 13 கடைசி நாளாகும்.கட்டணம் எவ்வளவு? தேர்வை எழுத பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.,) ரூ. 500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இரண்டு தாள்கள் மட்டுமே: இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 -ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment