எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: இன்று வெளியீடு
தமிழகத்தில் கடந்த ஜனவரி 29 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை
நடைபெற்ற எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை
எழுதிய தனித்தேர்வர்களின் முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தனித்தேர்வர்கள் dge1.tn.nic.in
என்ற
இணையதள முகவரியில் தங்களது பதிவெண், பிறந்த
தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து
கொள்ளலாம்.
மேலும் தேர்வர்கள்
இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போதுவழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு
குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment