ஆக.15, விடுதலை நாள் கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்வோம். பள்ளியின் தேவைகளையும் குறைகளையும் பட்டியல்போட்டு கிராமசபையில் முன்வைப்போம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 14, 2018

ஆக.15, விடுதலை நாள் கிராமசபைக் கூட்டத்திற்குச் செல்வோம். பள்ளியின் தேவைகளையும் குறைகளையும் பட்டியல்போட்டு கிராமசபையில் முன்வைப்போம்.

நாட்டில் உள்ள எல்லா அரசுப்பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து  வகுப்புக்கு ஒர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் திருத்தம் செய்யவேண்டும்.
-----------------------------
கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் அறிவுக் கூடங்களான  அரசுப்பள்ளிகளைப் பலப்படுத்த முயற்சி எடுப்போம்.  நம்ம ஊரில் வரும் ஆக.15,  விடுதலை நாள் கிராமசபைக் கூட்டத்திற்குச்  செல்வோம். பள்ளியின் தேவைகளையும் குறைகளையும்  பட்டியல்போட்டு கிராமசபையில் முன்வைப்போம். குறைகளை சரிசெய்யவும் தேவைகளை  நிறைவேற்றக் கோரியும் மக்கள் அனைவரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றுவோம். நாட்டில் உள்ள எல்லா அரசுப்பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்புக்கு ஒர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் திருத்தம் கொண்டுவர நடுவண் அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றி தலைமை அமைச்சருக்கும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைப்போம்.

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு.

No comments:

Post a Comment