நாளை ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம், தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிப் பெருக்கு விழா கொண்டாட பட உள்ளதால் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாளை தருமபுரி மாவட்டத்திற்கு விடுமுறைக்கு அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை விடுமுறைக்கு பதிலாக வரும் 11-ம் தேதி வேலை நாளாகும் என தருமபுரி ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருச்சி மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment