இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில், ஆக., 16 வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ' திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, டிப்ளமா ஆகியவற்றுக்கு, தொலைநிலை கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்கள், பல்கலையின் மண்டல அலுவலகம் மற்றும் படிப்பு மையத்தில் நேரடியாக சென்றும் சேரலாம்.
இதில், https://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பில், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆக., 16 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, இக்னோ சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்களை, -044 - -2661 8438, 2661 8039 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment