தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 12, 2018

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள்

எளிய அறிவியல் சோதனைகள் தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்விற்கு வந்தவர்களை மாணவி மாதரசி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் ராஜ்கமல் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் இயற்பியல்,வேதியியல் மாற்றங்கள் ,மீள்வினை ,மீளாவினை ,இயக்கம் சார்ந்த விதிகள்,நியூட்டன் முதல் விதி போன்றவை தொடர்பான சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர். நிறைவாக மாணவர் பாலசிங்கம் நன்றி கூறினார். பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டாக அறிவியல் கற்றல் வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை செய்து கற்று கொண்டனர்.

No comments:

Post a Comment