ஐ.சி.டி., பயிற்சி நடப்பாண்டிலும் வழங்கப்பட வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 8, 2018

ஐ.சி.டி., பயிற்சி நடப்பாண்டிலும் வழங்கப்பட வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை

கம்ப்யூட்டர் பயிற்சி வழங்காததால், ஸ்மார்ட் வகுப்பறைகளில், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப்பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை, கற்பித்தலுக்கு மட்டுமல்லாமல், தேர்வு நடத்தவும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், கடந்தாண்டு ஐ.சி.டி., பயிற்சி திட்டம் துவங்கப்பட்டது.

அரசின் கல்வி இணையதளங்கள் தவிர, பாடசாலை போன்ற இணையதளங்களில் இருந்தும், பாடத்திட்ட கருத்துகளை பதிவிறக்கம் செய்தல், தேர்வு நடத்துதல், வினா தயாரிப்பு குறித்து, கடந்தாண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இத்திட்டம் சார்ந்த, எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஓரிரு நாட்கள் வழங்கப்பட்ட பயிற்சியில், பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், யாரிடம் விளக்கம் பெறுவது என, தெரியாமல் ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'ஆன்லைன் தேர்வு முறை பரவலாகிவிட்டது. வரும்காலங்களில் திறனாக்க தேர்வுகள், ஆன்லைனில் நடத்த வாய்ப்புள்ளது.

எனவே,ஐ.சி.டி., பயிற்சி நடப்பாண்டிலும் வழங்கப்பட வேண்டும். புதிய சிலபஸ் அடிப்படையில், வினாக்குறிப்புகளை மாநில கல்வியியல் பயிற்சி மையம் தயாரித்து அளித்தால், மாணவர்கள் பயனடைவர்' என்றனர்.'கல்வித்துறை உத்தரவிட்டால் பயிற்சி'ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் கண்ணனிடம் கேட்டபோது,'' ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் கடந்தாண்டு பயிற்சி வழங்கினோம்.

தற்போது பயிற்சி வழங்கும் பொறுப்பு அளிக்கப்படவில்லை. கல்வித்துறை உத்தரவிட்டால், பயிற்சி வழங்கப்படும்,'' என்றார்

No comments:

Post a Comment