எழுத்தறிவு தேர்வில் சாதனை படைத்த மூதாட்டிக்கு லேப்டாப் பரிசளித்த அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 8, 2018

எழுத்தறிவு தேர்வில் சாதனை படைத்த மூதாட்டிக்கு லேப்டாப் பரிசளித்த அரசு

கேரள மாநிலத்தில் இளமைக்காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக அக்‌ஷரலக்‌ஷம் என்னும் பெயரில் எழுத்தறிவு இயக்கத்தை அம்மாநில அரசின் கல்வித்துறை நடத்தி வருகிறது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல்,  கணிதம் ஆகியவற்றின்  அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வில் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த 96 வயது மூதாட்டியான கார்த்தியாயினி அம்மா, 100-க்கு 98 மார்க் எடுத்து  சாதனை படைத்துள்ளார். இதற்குப் பிறகு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியை முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

இந்நிலையில், எழுத்தறிவு இயக்கத்தில் முதலிடம் பிடித்த கார்த்தியாயினி அம்மாவின் கற்றல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு மாநில கல்வித்துறை சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரிசை கல்வி அமைச்சர் நேற்று வழங்கினார். லேப்டாப்பை ஆன் செய்து காட்டிய அமைச்சர், அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

No comments:

Post a Comment