புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே பாஸ்..!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 25, 2020

புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே பாஸ்..!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே பாஸ்..!!

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமலாகியுள்ளது. மக்கள் வெளியே வந்தால் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதாமலேயே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ள நிலையில், இது ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நிறைவடையும் என்பதால், தேர்வு வைப்பதற்கு வழியில்லாததால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கல்வித்துறை கொள்கைகளை ஒத்துக்போகக்கூடிய புதுச்சேரி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment