அன்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்!
கல்வித்துறை உத்தரவின் பேரில், நாம் அனைவரும் வகுப்புகள் அளவில் மற்றும் பள்ளிகள் அளவில் வாட்ஸ் அப் குழு உருவாக்கியுள்ளோம்.
மார்ச் 15 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ள நிலையில், மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் தெளிவற்ற நிலை காணப் படுகிறது.
ஆகவே, மாணவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில், கீழ்கண்ட எளிய Rhyming வார்த்தைகளை பகிர்வதால், அனைத்து மாணவர்களும் கற்றுக் கொள்ளா விட்டாலும், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பெற்றோரின் குழந்தைகள் இதை கற்க வாய்ப்பு உண்டு.
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் போது, இந்த Rhyming வார்த்தைகளை குறிப்பிட்ட முறை எழுதி ஒப்படைக்கும் மாணவர்கள் மற்றும் நன்கு வாசிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என ஊக்கப்படுத்துவதன் மூலம் மாணவர்களை கற்கச் செய்யலாம்.
நாம் இவ்வாறு செய்வதன் மூலம், ஆசிரியர்கள் விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்காக கற்றல் கருவிகள் தயாரிக்கிறார்கள். மாணவர்கள் மீது அக்கறை செலுத்துகிறார்கள் என்ன நன்மதிப்பு சமுதாயத்தில் ஏற்படும்.
வீட்டில் உள்ள பெற்றோர், அண்ணன், அக்கா ஆகியோர் மாணவர்கள் கற்க உதவுமாறு கோரலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம், நமது வேலையும் எளிதாகும்.
பள்ளிக்கு அருகில் உள்ள ஆசிரியர்கள் இதை நகல் எடுத்து மாணவர்களுக்குத் தரலாம்.
மொத்தம் 8 பக்கங்கள். ஒரு மாணவனுக்கு ரூபாய் 8 மட்டுமே செலவாகும்.
ஆனால் இதன் பயன் மிகப் பெரிது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். ( கிட்டத்தட்ட 1000 வார்த்தைகளை மிக எளிதாக கற்க முடியும்)
*முதல், இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான முக்கிய ஆங்கில வார்த்தைகளின் தொகுப்பு எளிய Rhyming வடிவில் ...*
*ஆங்கிலம் - ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், மூன்று பருவங்களிலும் இடம் பெற்றுள்ள, முக்கிய ஆங்கில வார்த்தைகள் சேகரிக்கப்பட்டு, மாணவர்கள் மிக எளிதாக கற்கும் வண்ணம், Rhyming வார்த்தைகளாக தொகுக்கப் பட்டுள்ளது.*
இந்த வார்த்தைகளை மாணவர்களால் மிக எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.
தொடர்ந்து வாசித்து மற்றும் எழுத பயிற்சி அளிப்பதன் மூலம் ஆங்கிலம் வாசிப்பதும், பிழையின்றி எழுதுவதும் மிக எளிதாகும்.
No comments:
Post a Comment