அரவட்லா மலைக்கிராமத்தில் பயிலும் 72 மாணவர்களின் பெற்றோர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 5, 2020

அரவட்லா மலைக்கிராமத்தில் பயிலும் 72 மாணவர்களின் பெற்றோர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இன்று(05.05.2020) நம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரவட்லா மலைக்கிராமத்தில் பயிலும் 72 மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அத்தியாவசிய தேவையான அரிசி வழங்கப்பட்டது.இந்நிகழ்வை அரவட்லா நாட்டாண்மைதாரர் தலைமை தாங்கினார்.இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.அ.பிரசாத் அவர்கள் வரவேற்று கொரானா பாதிப்புகள் பற்றியும்,கை கழுவும் முறைகள் பற்றியும்,முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறித்து விழிப்புணர்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.மொத்தம் 12 மூட்டைகள் அரிசி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் நிதியுதவியுடன்,என் உறவினர் பிரியா அவர்களும் நிதியுதவி வழங்கினார். இறுதியாக ஆசிரியர்.திரு.சு.கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்.இந்நிகழ்வில் தனிமனித இடைவெளி கடைபிடித்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment