சிந்தனைக்கு...........
அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?
நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது.
காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!
நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை.
ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!
சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது...
அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!
சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!
நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!
சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?
நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால்,
*அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!*
1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!
சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!
அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம்,
ஆனால்,
என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது!
கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.
இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;
அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,
மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!
ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.
கொண்டுசெல்லவும் முடியாது!
என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி,
அவருக்கு தான் சொந்தம்.
அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!
சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.
அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்!
தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,
காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!
இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை!
நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...
பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!?
நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.
சக மனிதர்களையும் நேசிப்போம்.
முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!
No comments:
Post a Comment