பள்ளி கல்வி இயக்குனரகத்தின் 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை பிரிவில் இருந்து, அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டி.சி., என்ற மாற்று சான்றிதழை தயாரித்து கட்டாயம் வழங்க வேண்டும்.
அதே பள்ளியில், மாணவர்கள் பிளஸ் 1 படிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கும் மாற்று சான்றிதழ் வழங்குவது அவசியம்.எந்த காரணத்திற்காகவும், மாற்று சான்றிதழ் தராமல், மாணவர்களை பிளஸ் 1ல் சேர்க்க வேண்டாம். பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவர்கள், அதே பள்ளியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் புதிய மாணவர்களாகவே கணக்கிடப்பட்டு சேர்க்கை எண் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment