RTE Act -படி பள்ளி சேர்க்கைக்கு TC கட்டாயம்:* 💥 G.O. Ms No. 189 /2010 & 💥 Matric Director Proceedings / 2018 சொல்வது என்ன? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 21, 2021

RTE Act -படி பள்ளி சேர்க்கைக்கு TC கட்டாயம்:* 💥 G.O. Ms No. 189 /2010 & 💥 Matric Director Proceedings / 2018 சொல்வது என்ன?

RTE Act -படி பள்ளி சேர்க்கைக்கு TC கட்டாயம்:* 💥 G.O. Ms No. 189 /2010

& 💥 Matric Director Proceedings / 2018 சொல்வது என்ன?

💥 G.O. Ms No. 189 /2010

                &

💥 Matric Director Proceedings / 2018 

    சொல்வது என்ன?


*அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை சேர்க்கைக்கு TC அவசியமில்லை,* எனவும் *Birth Certificate ஐ மட்டுமே* வைத்து *வயது அடிப்படையில்* Admission செய்யலாம் எனவும் *RTE Act* ல் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி அரசுப் பள்ளிகள் *தவறான தகவலை அளித்து Admission செய்து வந்தனர்*. இது மிகப்பெரிய மோசடி.

    *6 to 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயில* TC தடையாக இருக்கக்கூடாது என *RTE Act ல்* குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட வயது மாணவன் குறிப்பிட்ட வகுப்பில் சேர TC இல்லை என்பது தடையாக இருக்க கூடாது. Example ஏதாவது காரணத்தினால் ஒரு மாணவன் ஏற்கனவே பள்ளிக்கு செல்ல இயலாமல் இருந்து  8 வயதில் 3 ஆம் வகுப்பில் சேர விரும்பினால், அந்த மாணவன் ஏற்கனவே *எந்த பள்ளியலும் படிக்கவில்லை என்பதை அறிந்து,* அவனுக்கு *முறையான Special Training வழங்கி* அவன் வயதிற்குரிய வகுப்பில் *Direct Admission* செய்யலாம். ஆனால் அவன் ஏற்கனவே *வேறு பள்ளியில்  படிக்கவில்லை என்று அறிந்திருக்க* வேண்டும். 

[மாறாக ஒரு பள்ளியில் படித்து அந்த பள்ளியில் TC மறுத்தாலும், அதைக் கோரி பெற அவனுக்கு Rights உண்டு. அந்த பள்ளி எக்காரணம் கொண்டும் TC வழங்க மறுக்க கூடாது.]

   TC இல்லாவிடினும், Date of Birth Proof ஐ வைத்து *Special Training கொடுத்து Admission செய்யலாம்* என RTE Act ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே *G.O.Ms. No : 189 Dated 12.07.2010* லும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

   ஆனால், ஒரு பள்ளியில் ஒரு வகுப்பை முடித்து *அந்த பள்ளியில் TC வாங்கி வராமல் வேறு எந்த பள்ளியிலும் அடுத்த வகுப்பில் சேரலாம் என RTE Act ல் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.*

   ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு TC  இல்லை என்றால் அவன் வேறு பள்ளியில் படிக்கவில்லை என்றால் ...  அவனுக்கு *Special Training* கொடுத்து அவன் வயது அடிப்படையில் Admission செய்யலாம். *கட்டாயம் Special Training மட்டும்* கொடுத்ததற்கான *ஆதாரம் காட்ட வேண்டும்.*

   இதே, பிரச்சினையில் *24.04 2018 அன்றைய Matric Director Proceedings ல் TC கட்டாயம்* என குறிப்பிடப்பட்டுள்ளது. 

     *TC பெற்று Admission செய்யப்பட்டதை BEO & DEO & CEO ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும் என உள்ளது.*


  இத்துடன் ...

👉 G.O. Ms.  No 189/2010 

&

👉 Matric Director Proceedings Dated 24.04.2018 


ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.


     இதை *தமிழகத்தின் 780 - BEO's & 119 - DEO's Whatsapp க்கும்* அனுப்பியுள்ளேன்.


நீங்களும் இதை முடிந்தவரை *Forward* செய்யவும்.

  இதையும் *மீறி எந்த அரசு பள்ளியிலும் TC இல்லாமல் Admission செய்யப்பட்டதை நீங்கள் அறிந்தால்,* இந்த *குறிப்பிட்ட மாணவர் எங்கள் பள்ளியில் பயின்றார், ஆனால் TC கேட்டு Apply செய்யவில்லை. அவன் தற்போது TC இல்லாமல்* இந்த குறிப்பிட்ட அரசு பள்ளியில் *முறையான பயிற்சி இல்லாமல்* (இந்த Special Training - *6 மாதம்* வரை இருக்க வேண்டும்) *Admission* செய்யப்பட்டுள்ளான். இது RTE Act க்கு முரணானது. ஆகவே, அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் என அந்த பகுதி *BEO & DEO* ஆகியோரிடத்தில் *Complaint* செய்யவும். அதன் நகலை FePSA விற்கும் அனுப்பவும்.


Date : 19.06.2021


- M. ஆறுமுகம்

State President

FePSA.

No comments:

Post a Comment