தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 21, 2021

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு.

 தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப்

பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் , உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும் . அதே நேரத்தில் , தமிழ்நாட்டு மக்களுக்கு , குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் . இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் , ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் , தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.


DIPR - TNLA - Governor Address -(Tamil)- Date - 21.06.2021.pdf

No comments:

Post a Comment