1 TO 5th - கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன்வளர்ப்
பயிற்சி பணிமனை ( ஜீலை 24 முதல் 28 ) - SCERT Proceedingsதொடக்கநிலை கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன்வளர்ப் பயிற்சி வழங்குதல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை விடுவித்தல் பணிமனை ஏற்பாடு செய்தல் பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக SCERT Proceedings... 2024-2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மையகற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் , விரிவுரையாளர்கள் , பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிமனையில் தொடக்க நிலை வகுப்பறைகளுக்கான ( 1 முதல் 5 ) கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சியை அளிப்பதற்காக பணிமனை ஜீலை 24 முதல் 28 வரை பில்லர் மையம் , நாகமலை புதுக்கோட்டை , மதுரை மாவட்டத்தில் நடைபெறுவதால் இணைப்பு பட்டியலில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
1 to 5 TOT Maths Training - SCERT Proceedings - Download here...
No comments:
Post a Comment