வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக 4 & 5 வகுப்பு ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர் அடுக்கம்பாறை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சிக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர்.மணி அவர்கள் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி பேராசிரியர்கள் யோகானந்தம், ஜான் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். வேலூர் மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர்.யுவராஜ் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் உடல் நலனும் நல்வாழ்வு மற்றும் முதலுதவி குறித்தும் பயிற்சி அளித்தார். பேராசிரியர் சி.லட்சுமி அவர்கள் ஒருங்கிணைத்து முடிவில் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment