வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தமிழகம் மற்றும் புதுவை மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான காமராஜர் பேச்சுப்போட்டி குடியாத்தம் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முன்னால் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழா மற்றும் என்.எம்.எஸ் கல்வித் திருவிழாவிற்காக
மாவட்ட அளவில் நடைபெற்ற காமராஜர் பேச்சுப் போட்டியில் பேர்ணாம்பட்டு ஒன்றியம் பெரியதாமல் செருவு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பாக மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி சான்றிதழினை தலைமை ஆசிரியர் சாவித்திரி அவர்களிடமும் பட்டதாரி ஆசிரியர்கள் செல்வராஜ், கணேசன், மான்விழி ஆசிரியர்கள் ஹரிஹரன், நந்தினி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment