நேரடியாக செயலியில் இருந்து வருமான வரி செலுத்தலாம்: போன் பே-வில் புதிய அம்சம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 24, 2023

நேரடியாக செயலியில் இருந்து வருமான வரி செலுத்தலாம்: போன் பே-வில் புதிய அம்சம்

நேரடியாக செயலியில் இருந்து வருமான வரி செலுத்தலாம்: போன் பே-வில் புதிய அம்சம்'போன் பே' செயலியில் இருந்து நேரடியாக வருமான வரி செலுத்தும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
        இது வரி செலுத்தும் பணியில் பயனர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் எனவும் தெரிகிறது. இந்தியாவில் தற்போது பெரும்பாலான இடங்களில் யுபிஐ மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். தற்போது கூகுள் பே, போன் பே உட்பட பல செயலிகள் பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள உதவுகிறது. 
 
        இந்த சூழலில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் போன் பே செயலியில் ‘Income Tax Payment’ என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் முன்கூட்டியே வருமான வரி செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
            இதன் மூலம் பயனர்கள் வரி செலுத்துவதற்கான வலைதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பே-மேட் உடன் இணைந்துள்ளது போன் பே. இதன் மூலம் பயனர்கள் வரி மட்டும் செலுத்த முடியும். 
 
        வருமான வரி கணக்கு தாக்கல் (ஐடிஆர்) செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.யுபிஐ மூலம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொண்டும், கிரெடிட் கார்டு மூலமாகவும் வரி செலுத்தும் வசதி உள்ளதாகவும் போன் பே தெரிவித்துள்ளது. 
 
             பயனர்கள் போன் பே செயலியில் உள்ள டேக்ஸ் பேமெண்ட் ஆப்ஷனில் பான் கார்டு விவரம், வரியின் வகைப்பாடு - நிதி ஆண்டு - வரி தொகை உள்ளிட்ட விவரங்களை கொடுத்து சலான் பெற்று பயனர்கள் வரி செலுத்தலாம்.

No comments:

Post a Comment