அகவிலைப்படி உயர்வு எப்போது? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 17, 2023

அகவிலைப்படி உயர்வு எப்போது? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள்!

அகவிலைப்படி உயர்வு எப்போது? - காத்திருக்கும் அரசு ஊழியர்கள்! தமிழகத்தில் அகவிலைப்படி மீண்டும் எப்போது உயர்த்தப்படும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். 
 
            அகவிலைப்படி: இந்தியாவில் மாநில அரசுகள் ஒரு நிதியாண்டில் 2 முறை அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. 
 
        சமீபத்தில் மத்திய பிரதேச அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தியது. இதனையடுத்து அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி உயர்வால் அம்மாநிலத்தில் சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 
 
        அதற்கு முன்னதாக ராஜஸ்தான், அசாம், தமிழ்நாடு, கோவா, ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்த கட்ட DA உயர்வுக்கு ஊழியர்கள் தயராகி வருகின்றனர். அதன் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் விரைவில் அடுத்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
        அதாவது ஜனவரிக்குரிய உயர்வு ஏப்ரல் மாத முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், 7வது ஊதியக்குழுவின் தகவல் படி ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், தமிழகத்திலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். 
 
        அதற்காக அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment