அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் பூஜ்ஜிய கலந்தாய்வு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 18, 2024

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் பூஜ்ஜிய கலந்தாய்வு.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் பூஜ்ஜிய கலந்தாய்வு.

     ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை அடிப்படையில் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களும் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படவுள்ளது..

அனைத்து ஆசிரியர்களும் இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும்.பணியில் மூத்த ஆசிரியர்கள் மாநிலத்தில் எங்கு பணிபுரிந்தாலும் அவர்கள் விரும்பும் இடம் கிடைக்கும்.கிடைக்கும் இடத்தில் மூன்றாண்டுகள் மேல் பணியாற்ற இயலாது.மூன்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் கலந்தாய்வு நடைபெறும்.அதில் விண்ணப்பித்து அருகாமையில் காலியாக உள்ள இடத்தை தேர்வு செய்யலாம்.எந்த பள்ளியும் மூன்றாண்டுகளுக்கு மேல் நிரந்தரம் கிடையாது.இது போல் பல்வேறு வகையான அதிரடி பரிந்துரைகள் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment