Non-Implementation of RTE Act, 2009... சட்டத்தை இயற்றி என்ன பயன்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 22, 2024

Non-Implementation of RTE Act, 2009... சட்டத்தை இயற்றி என்ன பயன்?

 Non-Implementation of RTE Act, 2009... சட்டத்தை இயற்றி என்ன பயன்?

நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8  வகுப்புகளுக்கு கட்டாயம் மூன்று பாட ஆசிரியர் நியமனம்: 15 ஆண்டுகளாக பின்பற்றப்படாத  கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகள்!  

கல்வி உரிமைச் சட்டம் 2009 வகுத்துள்ள பள்ளிக்கான விதிகள் மற்றும் தரங்கள் (Norms and Standards for a School) பற்றிய அட்டணையில் கீழுள்ள விதிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு குழந்தைக்கு வகுப்புக்குரிய கற்றல் அடைவுகளை உறுதி செய்ய பாட ஆசிரியர் நியமன முறை சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(b)For sixth class to eighth class

(1)  At least one teacher per class so that there shall be at least one teacher each for— (i) Science and Mathematics; (ii) Social Studies; (iii) Languages.

(2) At least one teacher for every thirty-five children.

(3) Where admission of children is above one hundred—

(i) a fulltime head-teacher;

(ii) part time instructors for— (A) Art Education; (B) Health and Physical Education;

(C) Work Education

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக்கான விதிகள் மற்றும் தரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை குறைந்தது வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் குறைந்தது மூன்று பாட ஆசிரியர்களை

(i) Science and Mathematics; (ii) Social Studies; (iii) Languages என்ற பாட முறைப்படி அனைத்துப் பள்ளிகளிலும் நியமிக்க வேண்டும். ஆனால் பல நடுநிலைப் பள்ளிகளில் மூன்று பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

ஒரே பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் சில நடுநிலைப்பள்ளி பள்ளிகளில் பணியாற்றும் நிலையும் உள்ளது.

ஒரு நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 குழந்தைகளுக்கு மேல் சேர்க்கை இருந்தால் முழு நேரத் தலைமை ஆசிரியர்   [a fulltime head-teacher] மற்றும் மூன்று பகுதி நேரப் பயிற்றுநர்களை [part time instructors for— (A) Art Education; (B) Health and Physical Education;  (C) Work Education]  நியமிக்க வேண்டும்.  

கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்ரல் 1 முதல்  நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், 15 ஆண்டு காலமாக சட்டத்தில் வகுத்துள்ள விதிகளின் படி தமிழ்நாட்டில் பல நடுநிலைப் பள்ளிகளில் பாட ஆசிரியர் முறை நியமனங்கள் பின்பற்றப்படவில்லை.  முழு நேரத் தலைமையாசிரியர் பணியிடமும் உருவாக்கப்படவில்லை.

நடப்புக் கல்வியாண்டில் இருந்தாவது கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி, பாட ஆசிரியர் நியமனம் மற்றும் 100 குழந்தைகளுக்கு மேல் உள்ள பள்ளிகளில் முழு நேரத் தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment