முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உயர்வு இல்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 22, 2024

முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உயர்வு இல்லை

முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உயர்வு இல்லை 

        கண்துடைப்பிற்கு நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு- முதுகலை ஆசிரியர்கள் விரக்தி*l தமிழகத்தில் பொதுவாகவே கடந்த பல வருடங்களாக முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிவிட்டு பின்னர் முதுகலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 

        ஆனால் கடந்த ஆண்டு சில வழக்குகள் காரணமாக குறிப்பிட்ட தேதியில் பதவி உயர்வு வழங்க இயலவில்லை. அதனால் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.பதவி உயர்வால் ஏற்பட்ட காலியிடங்கள் நிர்வாக மாறுதல் மூலம் நிரப்பப்பட்டது. 

             இந்நிலையில் இந்த ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படாமலேயே பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த கால் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் பேரில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பேனல் தயாரிக்கப்பட்டது. 

       ஆனால் தற்போது வெளியிடப்பட்ட திருத்திய கலந்தாய்வு அட்டவணையில் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்காமல் கலந்தாய்வு நடத்தினால் எந்த பயனும் இல்லை. 

            தற்போது காலியாக உள்ள சுமார் 450 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பங்கு 100 போக, 350 முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ளது. இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டால் ஏற்படும் இந்த 350 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஏராளமான முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற இயலும். பதவி உயர் வழங்காமல் மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் இருக்கும் சொற்ப காலி பணியிடங்களில் ஓர் இருவர் மட்டுமே மாறுதல் பெற இயலும். 

             உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை பொறுத்த வரை எந்த வழக்கும் நிலுவையில் இல்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து முதுகலை ஆசிரியர்களின் தரவரிசை பட்டியல் தரப்படாததே இந்த தாமதத்திற்கு காரணம் என இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

        ஆனால் கடந்த வருடம் உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் அனைத்து பணியிடங்களுக்கும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு விட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

         இந்த நிலையில் காரணமே இல்லாமல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை தள்ளிப் போடுவது ஏன் என முதுகலை ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment