25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 30, 2016

25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கை; வரும் 3 முதல் விண்ணப்பம் !

தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்,மே, 3முதல் வழங்கப்படுகிறது.
         இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில்,அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில்,தனியார் பள்ளிகளில், 25சதவீத இட ஒதுக்கீட்டில்,துவக்க
வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்கான கல்வி கட்டணத்தை,அரசே செலுத்துகிறது.வரும் கல்வியாண்டுக்கான (2016-17), 25சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு,தனியார் பள்ளிகளில்,மே, 3முதல், 18வரை,விண்ணப்பம் வழங்கப்படும். பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்தில் வசிப்போர்,குடும்ப வருமானம் இரண்டு லட்சத்துக்கும் குறைவாக உள்ளோர்,தங்களது குழந்தைகளை,இத்திட்டத்தில்,தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள்,நலிந்த பிரிவினர்,எஸ்.சி.,மற்றும் எஸ்.டி.,பிரிவை சேர்ந்த பெற்றோர்களும்,இத்திட்டத்தில்,குழந்தைகளை சேர்க்கலாம்.

தனியார் பள்ளிகள்அதிருப்தி

கடந்த மூன்றாண்டுகளில்,இத்திட்டத்தில் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டு,கல்வி கற்று வரும் நிலையில்,சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு மட்டுமே,அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட கல்வி கட்டணம் கிடைத்துள்ளதாக,அதிருப்தி நிலவுகிறது. இன்னும் பல பள்ளிகளுக்கு,கல்வி கட்டணம் வரவில்லை என தனியார் பள்ளி நிர்வாகங்கள் குற்றம்சாட்டுகின்றன.

தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறுகையில்,எந்த அடிப்படையில்,கல்வி கட்டணம்பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்பதில்,குழப்பம் நீடிக்கிறது. சில பள்ளிகளுக்கு கட்டணம் வந்துள்ளது. பல பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளாகியும்,கல்வி கட்டணம் இதுவரை கிடைக்கவில்லை.இதை முறைப்படுத்த,கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்,மாணவர் சேர்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவது,ஏமாற்றத்தை அளிக்கிறதுஎன்றார்.

No comments:

Post a Comment