நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 28, 2016

நடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சையளிக்க, நடமாடும் மருத்துவ குழு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முழு நேரமும் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அவர்கள், உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில், ஆசிரியர்களின் உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.

வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் பட்சத்தில், மாற்று பணியாளர் நியமித்து, தேர்தல் பணி தொடர்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும்போது, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால், சிகிச்சை அளிக்க, நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில், தேர்தல் காலத்தில், ஓய்வின்றி பணியாற்றுவதால் உடலும், மனமும் சோர்வடைகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில், தொகுதிக்கு இரண்டு நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன.

டாக்டர், நர்ஸ் மற்றும் உதவியாளர் என, மூவர் கொண்ட மருத்துவ குழு, ஓட்டுச்சாவடி மையத்தில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக சென்று சிகிச்சை தருகிறது. அதேபோல், திருப்பூர் மாவட்டத்திலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment