4 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 24, 2016

4 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

4 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

வேலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.நந்தகோபால் மாற்றப்பட்டு அவருக்கு பதில் பூம்புகார் கப்பல் கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த வி.சம்பத் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தொல்பொருள் ஆய்வுத்துறை ஆணையராக பணியாற்றி வரும் டாக்டர் டி.கார்த்திகேயன் முதுநிலை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டி.என்.ஹரிஹரன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழக போக்குவரத்து ஆணையாளராக பணியாற்றி வரும் சத்யபிரதா சாகு முதுநிலை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த என்.வெங்கடாசலம் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment