தாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 23, 2016

தாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்

அலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி வரை, தாய்மொழி வழி கல்வியை அளிக்க வேண்டும். இது குறித்து மாநில அரசுகளுடன் பேசி, ஒருமித்த கருத்து உருவாக்கப்படும். அதே நேரத்தில், தேசிய மொழியான, ஹிந்தியையும் மாணவர்கள் கற்க வேண்டும்.

அலுவலகப் பணி மொழியாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும். தாய்மொழி மற்றும் அலுவலக மொழிகளை ஊக்குவித்தால் தான், அந்த மொழிகள் வளர்ச்சி அடையும். மொழிகள் என்பது நம் கலாசாரத்துடன் தொடர்புடையவை.

தாய்மொழி மற்றும் ஹிந்தியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், ஆங்கிலத்தையும் மாணவர்கள் கற்க வேண்டும். ஆனால், ஆங்கில மோகத்தில் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment