மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 26, 2017

மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு.


தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு தொடக்கப்பள்ளி இயக்குனர், மெட்ரி குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பித்து உள்ளன. 
இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட வசதி போதாத பள்ளிகள் 740 உள்ளன. இந்த பள்ளிகள் தவிர 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்துக்கும், 3 ஆயிரம்நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனருக்கும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளன. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதாலும், அவர்கள் பெறும் கல்வி சான்றிதழ் தகுதி உடையதாக இருக்க வேண்டும் என்பதாலும் தகுதி உடைய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது.

எனவே தகுதி உடைய நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 2018 மே 31-ந்தேதி வரை அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மாணவர்கள் நலன் கருதி 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படஉள்ளன.

No comments:

Post a Comment