வியாபாரம் செய்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, April 21, 2017

வியாபாரம் செய்தால் பள்ளி அங்கீகாரம் ரத்து

பாடம் கற்றுத் தருவதை விட்டு, புத்தகம், சீருடை, புத்தக பை விற்பனையில் ஈடுபட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், பாட புத்தகம், லேப் - டாப் மற்றும் சீருடை உள்ளிட்டவை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.


ஆனால், தனியார் பள்ளிகளில், இந்த பொருட்களை, பெற்றோர் விலை கொடுத்து வாங்க வேண்டும். இதில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, 'ஷூ' போன்றவற்றை விலைக்கு விற்கின்றன. இதில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் லாபம் பார்ப்பதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், அங்கீகார பிரிவு துணை செயலர், ஸ்ரீனிவாசன் வெளியிட்ட சுற்றறிக்கை: புத்தகம், எழுதுப் பொருட்கள், சீருடை, ஷூ, புத்தகப்பை போன்றவற்றை விற்கும், வணிக ரீதியிலான நடவடிக்கைகளில், பள்ளிகள் ஈடுபடக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், பல பள்ளிகள், வியாபாரத்தில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பள்ளிகள், தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து, வணிக பணிகளில் ஈடுபடுகின்றன. எனவே, மீண்டும் எச்சரிக்கிறோம்.

வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தால், அந்த பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிகளின் படி, அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment