தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 26, 2017

தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது,
அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 25-ம் தேதி கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் எங்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கூறியுள்ளார். இதனால் தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
ஜூலை மாதத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்'' என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment