கிராமப்புற ஊதிய விகிதத்தை உயர்த்துமா பட்ஜெட்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 23, 2018

கிராமப்புற ஊதிய விகிதத்தை உயர்த்துமா பட்ஜெட்?

மத்திய பட்ஜெட்டில், கிராமப்புறங்களில் குறைந்து வரும் ஊதிய விகிதத்தை உயர்த்தவும்,
வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பிரத்யேக கவனம் செலுத்த வேண்டும்' என, முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.விவேக் காம்பீர், நிர்வாக இயக்குனர், கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்: கிராமப்புறங்களில், பல்வேறு பணிகளில் உள்ளோரின் ஊதிய விகிதம் குறைந்து வருகிறது.
போதிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்காததால், வளர்ச்சியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களின் செலவழிப்பு வருவாயும், மிகக் குறைவாகவே உயர்ந்துள்ளது. அதனால், மத்திய பட்ஜெட், வேளாண் உற்பத்தியை

மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

வருவாயை அதிகரிக்கும்

வேளாண் பொருட்களின் மானியங்களை உயர்த்துவதன் மூலம், விவசாயிகளின் கைகளில் பணப் புழக்கத்தை அதிகரிக்கலாம். கிராம வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை மேலும் உயர்த்தலாம். வேளாண் துறையை அடுத்து, அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு, மேலும் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கலாம்.பிரசாந்த் கட்டோர், எர்னஸ்ட்யங் டேக்ஸ் பார்ட்னர்: வருமான வரியை குறைத்து, செலவழிப்பு வருவாயை அதிகரிக்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் தேவை.

ஊக்கச் சலுகைகள்

முடங்கியுள்ள அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.ஆஷிஷ் கசாத், நுகர்பொருட்கள் மற்றும் சில்லரை விற்பனை பிரிவு, எர்னஸ்ட் அண்டு யங் இந்தியா பார்ட்னர்: கிடங்குகள், குளிர்பதன கிட்டங்கிகள் ஆகியவற்றுக்கு, ஊக்கச் சலுகைகள் வழங்கலாம். வருமான வரி வரம்பை உயர்த்தினால், நடுத்தர மக்கள் மற்றும்ஊதியதாரர் பயன் பெறுவர். செலவழிப்பு வருவாய் உயர்ந்தால், மக்களின் நுகர்வு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment