நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட உள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 26, 2018

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம்நடத்த திட்டம் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பலதகவல்கள் இடம்பெறும் நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மேமாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 

  நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2013 முதல் 2016 வரை, 3 ஆண்டுகாலமாக தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. வழக்குகள் முடிவடைந்தநிலையில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டுதகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தகுதித்தேர்வு தேர்ச்சி,7 ஆண்டு காலம்செல்லத்தக்கது. இதுவரையில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில்தேர்ச்சி பெற்று ஏறத்தாழ 94,000 பேர் அரசு வேலையை எதிர்பார்த்துகாத்திருக்கிறார்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர்நியமனம் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாகக்கொண்டு நடைபெறுவதில்லை. இதற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்முறை பின்பற்றப்படுகிறது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 தேர்வுமதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பிஎட் படிப்பு மதிப்பெண் (இடைநிலைஆசிரியர்கள் எனில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு) எனஒவ்வொரு தகுதிக்கும் குறிப்பிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்அளிக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்அடிப்படையில்தான் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலைஆசிரியர்களும் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

தகுதித்தேர்வுக்கு 60 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. ஒருவர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் தேர்வெழுதியமதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள முடியும். 20 ஆண்டுகளுக்குமுன்பு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்வுகளில் அதிகமதிப்பெண் தரப்படுவதில்லை. ஆனால், அண்மைக்காலமாகஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளிலும் கல்லூரிகளிலும் தாராளமாகமதிப்பெண் அளிக்கப்படுவதால் பழைய மாணவர்கள் வெயிட்டேஜ்முறையால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த முறையைகைவிட்டுவிட்டு தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்மட்டுமேஆசிரியர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கைதொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக ஆய்வுசெய்யபள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒருகுழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அரசிடம்சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைகள் ஆய்வுசெய்யப்பட்டன.


இந்தநிலையில், ஜனவரி 2வது வாரத்தில் பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும், ஆண்டுதோறும்தகுதித்தேர்வு நடத்துவது என்றும்முடிவுசெய்யப்பட்டது. நடப்புஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில்எடுக்கப்பட்ட முடிவின்படி இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வுநடத்தவும், மே மாதம் நடத்த உத்தேசித்து இருப்பதாகவும்இதுதொடர்பான விவரம் விரைவில் வெளியிடப்படவுள்ள வருடாந்திரஅட்டவணையில் இடம்பெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment