பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 24, 2018

பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்!!!

பாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்!!!
தமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ௧ - 10ம் வகுப்பு வரை, ஏழு ஆண்டுகளாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 14 ஆண்டுகளாகவும் பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை.
எனவே, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் அளவுக்கு, பாடத்திட்டங்களை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
அதன்பின், சில மாற்றங்கள் செய்து, இறுதி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கும், பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலாகிறது.
எனவே, முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு அமலாகும் வகுப்புகளுக்கான புத்தக தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மாதத்துக்குள், புத்தக பணிகளை முடித்து, தமிழ்நாடு பாடநுால் கழகத்திடம், புத்தக அச்சடிப்பு பணிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment