தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்க கருத்துக் கேட்பு கூட்டத்தை நாளைக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 6, 2021

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்க கருத்துக் கேட்பு கூட்டத்தை நாளைக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளிகள் திறப்புக்குக் கருத்துக் கேட்பு கூட்டம் நாளைக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் நாளைக்குள் கருத்துக் கேட்டு முடிக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்க கருத்துக் கேட்பு கூட்டம் நாளைக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் நடப்பாண்டில் பொதுத்தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம் அளித்து இருந்தார். அதன்படி முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் நாளைக்குள் கருத்துக் கேட்டு முடித்து, தலைமை ஆசிரியர்கள் தரவுகளை நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை தற்போது ஆணையிட்டுள்ளது. மேலும் கொரோனா தடுத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment