உலகத்தில் உள்ள மிகவும் கடினமான விஷயம் உடல் எடையை குறைப்பது தான் என பலரும் ஒப்புக் கொள்வார்கள். இருப்பினும் மிகவும் கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடையை அதற்கு பிறகு பராமரிப்பது தான் அதை விட கஷ்டமான விஷயமாகும். உடல் எடையை குறைக்கும் இலக்கை நீங்கள் வைத்திருந்தால், அதன் படி நடக்க அதற்கு ஒரு திட்டத்தை பின்பற்றுவீர்கள். ஆனால் உடல் எடையை குறைத்த பின் அந்த அக்கறை நம்மை விட்டு போய் விடுகிறது. அதனால் தான், உடல் எடை குறைப்பிற்கு பிறகு, குறிப்பிட்ட காலத்திற்கு அதனை பராமரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
முதல் கட்ட உடல் எடை குறைப்பிற்கு பின், அதனை பராமரிப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால், உங்கள் வாழ்க்கை முறையின் மீது உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். உடல் எடை குறைப்பிற்கு பின் அதனை பராமரிப்பதற்கான வழிகள், உடல் எடையை குறைக்கும் வழிகளை விட நிரந்தரமானதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். ஜிம்மில் மணிக்கணக்கான நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக, தினமும் 30 நிமிடத்திற்கு தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
அதே போல், உடல் எடை மீண்டும் அதிகரித்து விடாமல் இருக்க உண்ணும் உணவின் மீது கூடுதல் கவனம் தேவை. உடல் எடை குறைப்பிற்கு பின் எடையை பராமரிக்க வேண்டுமானால் உங்கள் எடையை சீரான முறையில் சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கு உடல் எடையை குறைத்த பின், உங்கள் எடையை அப்படியே பராமரிப்பதற்கு சில சிறந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சீரான முறையில் எடையை சரிப்பார்த்தல்
உடல் எடையை குறைக்கும் இலக்கை அடைந்த பிறகு எடை பார்க்கும் கருவியை தூக்கி போட்டு விடலாம் என எண்ணி விடாதீர்கள். இழந்த எடையை மீண்டும் அடையாமல் இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள வாரம் ஒரு முறை உங்கள் எடையை சரிப்பார்த்து கொள்ளுங்கள்.
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள்
உடல் எடையை குறைத்த பிறகு ஜிம்மிற்கு செல்வதை விட்டு விட்டீர்களானால், உங்கள் எடை மீண்டும் அதிகரித்துவிடும். ஆகவே தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்மிற்கு செல்ல விருப்பமில்லை என்றால், யோகா அல்லது ஜாக்கிங் செய்யுங்கள்.
இறுக்கமான உடைகளை அணியுங்கள்
இறுக்கமான உடைகளை அல்லது ஜீன்ஸ் ஆகியவற்றை அணியுங்கள். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறதா என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் சமைப்பது
கஷ்டப்பட்டு குறைத்த எடையை பராமரிக்க வேண்டும் என்றால், வெளியே சாப்பிடுவதை குறைத்து விட்டு, வீட்டில் சமைத்த உணவுகளையே உண்ணுங்கள். வீட்டில் உண்ணுவதை விட வெளியே உண்ணும் உணவுகளால் கலோரிகள் அதிகரிக்கும்.
குறைவாக தொலைக்காட்சி பார்த்தல்
வீட்டில் ஒரு இடத்தில் அடைந்து கிடக்காதீர்கள். தொலைக்காட்சியை அணைத்தாலே போதும், நீங்கள் வேறு பல நடவடிக்கைகளில் ஈடுபட நேரம் கிடைக்கும். இதனால் உங்கள் கொழுப்புகள் குறையவும் வாய்ப்பு கிட்டும்.
அனைத்தையும் உண்ணலாம் ஆனால் அளவு முக்கியம்
நீங்கள் டயட்டில் இருந்த போது கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளை எப்படி தவிர்த்து வந்தீர்களோ, இப்போதும் அதையே கடைப்பிடிக்க வேண்டும். அதே போல் உணவு உண்ணும் அளவிலும் கவனம் தேவை. இப்போது நீங்கள் உருளைக்கிழங்கை உண்ணலாம், ஆனால் அது ஒரு அளவோடு இருக்க வேண்டும்.
ஜங்க் உணவுகள் வேண்டாம்
ஜங்க் உணவுகளில் ஊட்டச்சத்துக்களே கிடையாது. அது உங்கள் உடலில் ட்ரான்ஸ் கொழுப்புகளை சேர்க்கும். அதனால் ஜங்க் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வார இறுதியில் போர் வீரனாக மாறி விடாதீர்கள்
வார இறுதியில் மட்டும் அதிகமாக சாப்பிடுவது அல்லது அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்பது கூடாது. இந்த வார இறுதி போர் வீரனாக இருப்பது நன்மைக்கு பதில் தீமையை தான் விளைவிக்கும். வார இறுதியில் இப்படி வெளுத்து கட்டினால் அந்த வாரம் முழுவதும் நீங்கள் பட்ட பாடு வீணாகிவிடும்.
சிறிய அளவிலான உணவுகளை உண்ணுங்கள்
ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணுவதற்கு பதிலாக, உடல் எடை குறிப்பில் ஈடுபட்டதை போல், சிறிய அளவாக பல வேளைகளாக உணவருந்தலாம். இதனால் உங்கள் மெட்டபாலிக் வீதம் அதிகமாக இருக்க உதவும்.
கிரீன் டீ குடியுங்கள்
உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சில நல்ல பழக்கங்களை கடை பிடியுங்கள். உடல் எடையை குறைத்த பிறகு கிரீன் டீ போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகுங்கள்.
சமநிலையை பராமரியுங்கள்
குறைத்த உடல் எடையை பராமரிப்பதற்கு சிறந்த வழி சமநிலை, அதாவது சமநிலையான உணவு மற்றும் உடற்பயிற்சி. ஆரோக்கியமான உணவுகளுடன் கொழுப்புமிக்க உணவுகளை சமநிலை படுத்துங்கள். சமநிலையுடனான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்திடுங்கள்.
No comments:
Post a Comment