மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – அமைச்சரவை ஒப்புதல்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 5, 2024

மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – அமைச்சரவை ஒப்புதல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2005ம் ஆண்டுக்கு பின் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2005க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் இது குறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து நவம்பர் 2005க்குப் பிறகு பணியில் சேர்ந்த மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) வழங்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2005க்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட 26,000 மாநில அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 26,000 ஊழியர்கள் OPS மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து, அதற்குரிய ஆவணங்களை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அமைச்சரவை ஆறு மாத கால அவகாசம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment