முப்படை அதிகாரி பணிக்கு 463 இடங்கள் பட்டதாரிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 29, 2015

முப்படை அதிகாரி பணிக்கு 463 இடங்கள் பட்டதாரிகள்

இந்திய ராணுவ அகாடமிகளில், முப்படை அதிகாரி பணிகளுக்கு 463 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த பணியில் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

ராணுவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காம்பைன்ட் டிபென்ஸ் சர்வீசஸ் எக்ஸாம்(2)-2015 என்ற தேர்வின் அடிப்படையில் தகுதியான பட்டதாரி இளைஞர்கள் இதில் சேர்க்கப்படுகிறார்கள். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வின் அடிப்படையில் இந்தியன் மிலிடரி அகாடமியில் 200 பேரும், கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப் படை அகாடமியில் 32 பேரும் பயிற்சிக்காக சேர்க்கப்படுகிறார்கள். இதேபோல சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் ஆண்கள் 175 பேரும், பெண்கள் (நான்டெக்னிக்கல்) 11 பேரும் பயிற்சிக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் கீழே...வயது வரம்பு:

இந்தியன் மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் சேர விண்ணப்பிப்பவர்கள் 2-7-1992 மற்றும் 1-7-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

விமானப்படை அகாடமியில் சேர விண்ணப்பிப்பவர்கள் 2-7-1992 மற்றும் 1-7-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் சேர விரும்புபவர்கள் 2-7-1991 மற்றும் 1-7-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அனைத்துப் பிரிவுக்கும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தகுதியாக கேட்கப்பட்டு உள்ளது.  பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.

கடற்படை அகாடமிக்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விமானப்படையில் சேருபவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடம் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து, பின்னர் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.உடற்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். வயதுக்கேற்ற உயரம், எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/12, கண்ணாடியுடன் 6/6 என்ற அளவில் இருக்க வேண்டும்.கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஸ்டேட் வங்கி கிளைகளிலோ அதன் துணை வங்கிகளிலோ செலுத்தலாம்.விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 14-8-15

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 1-11-15

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க   www.upsconline.nic.in   என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment