வீட்டை குளுமையாக்கும் நவீன தொழில்நுட்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 29, 2015

வீட்டை குளுமையாக்கும் நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம் கட்டுமான துறையை புதுமையாகவும், எளிமையாகவும் மாற்றி விட்டது. வருடக்கணக்கில் நடக்கும் பணிகளின் கால அளவை வெகுவாக குறைத்து வருகிறது. கட்டுமான பொருட்கள், வண்ணங்கள் என அனைத்தும் புதுவடிவம் பெற்றுள்ளன. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாக கட்டுமான சந்தைகளுக்கு வரவிருக்கிறது ‘தண்ணீர் ரூப்புகள்’. ‘வாட்டர் டாப் ரூப்ஸ்’ என்றழைக்கப்படும் இவை மேற்            தளங்களின் மீது தண்ணீரை தேக்கி வைத்து வீட்டை குளுமையாக்குகின்றன. வாட்டர் ரூப்புகள்

வீட்டின் மேற்கூரை பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து வீட்டை குளுமைப்படுத்துவது எளிமையான முறை. இதற்கு முன்னர் தட்பவெட்ப கூரைகள், வினைல் ரூபிங் போன்றவை சந்தைகளில் புழக்கத்தில் இருந்தாலும் தண்ணீர் ரூப்புகள் முறை சிக்கனமானது. இதற்காக பிரத்தியேக பொருட்கள் தேவைப்படாது. வீட்டு கட்டுமான பணிகளின்போது கட்டமைத்து கொடுக்கும் நிறுவனங்களிடம் தெரிவித்தால் சிறிய தொகையில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக பாத்திகளை உருவாக்கி கொடுப்பார்கள். வீட்டின் மேற்    புறத்தில் தண்ணீரை நிரப்பியும், அறைகளின் உட்புறத்தில் மெல்லிய தகடுகளை பொருத்தியும் வீட்டை குளுமையாக்குகின்றனர். வெப்ப தாக்கம் குறையும்

கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அறைக்குள் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதை தடுக்கும் வகையில் இவை  வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாட்டர் ரூப்புகள் முறையில் கான்கிரீட் தளங்களின் உட் பகுதியில் மெல்லிய தகடுகள் பொருத்தப்படுகின்றன. இவை பொதுவாக பல வண்ணங்களில் கிடைக்க கூடியவை.

இதனால் கான்கிரீட் தளங்     களின் வழியே உள்நுழையும் வெப்பமும், குளிரும் இதன் மூலம் தடுக்கப்படுகின்றன. இந்த தகடுகள் அனைத்தும் எளிதில் இணைத்துக் கொள்ள கூடிய வகையிலும், எளிதில் பிரித்து எடுக்க கூடிய வகையிலும் அமையப்பெற்றுள்ளன. இவை தண்ணீர் பாத்திகளில் இருந்து வெளிவரும் வெப்பத்தை தடுத்து நிறுத்துகின்றன.

இதனால் கோடை காலங்களில் வீட்டுக்குள் வெப்பம் அதிக அளவில் உட்புகுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. அதன் தாக்கமாக அறைக்குள் வெப்பத்தின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அறைக்குள் வெப்ப சூழல் குறைந்து மிதமான குளுமை நிலவ இந்த முறை உதவுகிறது. பதிப்பு முறை

வீட்டின் உட்பகுதியில் பொருத்தும் தகடுகள் பல்வேறு அளவுகளிலும், தடிமன்களிலும் சந்தையில் கிடைக்கின்றன. இதனால் வீட்டின் மேற்கூரை தளத்தின் அளவிற்கு ஏற்ப தகடுகளை வாங்கி எளிமையாக பொருத்திவிடலாம். அதற்கு சிமெண்ட் கலவை மற்றும் திருகு முனை ஆணிகள் தேவைப்படும். அவற்றை கொண்டு எளிதாக இணைத்துவிடலாம்.

இந்த தகடு பொருத்தப்படுவதினால் கோடை மற்றும் குளிர் காலத்தில் வீட்டில் நிலவும் தட்பவெட்ப நிலையானது தக்க வைக்கப்படுகிறது. மேலும் குளிர் காலங்களில் கான்கிரீட் நீர் கசிவு, நீர் பூத்துபோதல், தளங்களில் நீர் படிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

No comments:

Post a Comment