முந்தைய SSLC பதிவு தொலைந்து விட்டது அல்லது பதிவு செய்த விவரத்தை பள்ளியில் இருந்து பெறவில்லை எனில் அதனை பெற வழிமுறைகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 25, 2015

முந்தைய SSLC பதிவு தொலைந்து விட்டது அல்லது பதிவு செய்த விவரத்தை பள்ளியில் இருந்து பெறவில்லை எனில் அதனை பெற வழிமுறைகள்


முந்தைய SSLC  பதிவு தொலைந்து விட்டது அல்லது பதிவு செய்த விவரத்தை பள்ளியில் இருந்து பெறவில்லை போன்ற காரணங்களைக் கூறுகின்றனர்.
இத்தகைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.  ஆம்.  முந்தைய வேலைவாய்ப்பு பதிவு எண்ணை மறந்த மாணவர்கள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பதிவை பதியும்போது HSC-UPDATION என்னும் TAB ல் ADD QUALIFICATION பகுதியில் REGISTRATION NUMBER க்கு நேராக உள்ள SEARCH ICON ஐ கிளிக் செய்யவேண்டும்.
பிறகு இன்னொரு புதிய விவர குறிப்பில் NAME, DATE OF BIRTH, FATHER NAME போன்ற விவரங்களை உள்ளிட்டால் அந்த மாணவரின் முந்தைய வேலைவாய்ப்பு பதிவு விவரம் திரையிடப்படும்.  அதைத் தேர்வு செய்தால் எளிமையாக முந்தைய வேலைவாய்ப்பு பதிவை கண்டுபிடிக்கலாம்.  இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒரே பெயர், பிறந்த தேதி உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளபோது FATHER NAME ஐ கொடுக்காமல் தேடினால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தங்களை திரையில் காண்பிக்கும்.  அப்போது மாவட்ட எண்ணை அடிப்படையாகக் கொண்டு சரியான நபரை கண்டுபிடிக்கலாம்.  நாம் கொடுத்த விவரங்கள் பொருந்தவில்லை என்றால் NO RECORDS FOUND என்ற செய்தி வெளியாகும்.

நன்றி  :  ஜெய்சங்கர்

No comments:

Post a Comment