கல்வித்துறை மெத்தனத்தால் மாணவர்கள்-பெற்றோர் அலைக்கழிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 29, 2015

கல்வித்துறை மெத்தனத்தால் மாணவர்கள்-பெற்றோர் அலைக்கழிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் இறந்ததையொட்டி பள்ளிகள் செயல்படுமா அல்லது விடுமுறையா என தெரியாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று முன்தினம் மாலை காலமானார். அத்தகவலை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிகள் பல, நாளை (நேற்று) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்தன.அதன்பேரில் பல தனியார் பள்ளி நிர்வாகங்களும் நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவையொட்டி இன்று பள்ளிக்கு விடுமுறை என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டது.

இதனால், பள்ளி-கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ-வேன் ஓட்டுனர்கள் எவரும் மாணவர்களை அழைக்க செல்லவில்லை. விடுமுறை என தொலைக்காட்சிகளில் செய்தி ஓடியதால், மாணவர்களும் பள்ளிக்கு கிளம்பவில்லை.

இந்நிலையில் காலை 8:00 மணிக்கு, பள்ளிகள் இன்று (நேற்று) வழக்கம்போல் இயங்கும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்கனர் கண்ணப்பன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே, விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகங்கள், பள்ளி இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவித்தன. சில பள்ளி நிர்வாகங்கள், காலை 10:00 மணிவரை பள்ளிக்கு வரலாம் னெ மாணவர்களின் பெற்றோர்களுக்கு "எஸ்.எம்.எஸ்' அனுப்பின. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பள்ளி உண்டா, இல்லையா என்ற குழப்பம் நிலவியது. இதனால், உள்ளூர் மாணவ-மாணவிகள் சிலர் பள்ளிக்க புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகள் பல தங்கள் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அறிவித்தன.

தனியார் தொலைக் காட்சிகளில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டதுமே, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெளிவான முடிவை அறிவிக்காததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

No comments:

Post a Comment