தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் விரைவில் வெளிநாட்டுப் பேராசிரியர் கற்பிக்கும் புதிய திட்டம்: யூஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் தகவல். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 3, 2016

தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் விரைவில் வெளிநாட்டுப் பேராசிரியர் கற்பிக்கும் புதிய திட்டம்: யூஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் தகவல்.

தமிழகத்திலுள்ள 4 பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் மூலம் புதிய பாடப் பிரிவுகளை கற்பிக்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகமத்திய பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.மதுரை விரகனூரிலுள்ள வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றபட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக வெளிநாட்டிலிருந்து 1,000 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடம் கற்பிக்கும் "கியான்' எனும் புதிய திட்டம் விரைவில் தமிழகத்தில் சென்னை, மதுரை காமராஜர், பாரதிதாசன், பாரதியார் ஆகிய பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படும். ஒன்று அல்லது இரு வாரங்கள் பாடம் கற்பிக்கும் அவர்களுக்கு, வாரத்துக்கு 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். ஸ்வாம் எனும் இணையதள கல்வி முறையை ஜூலை மாதம் பிரதமர் தொடங்கிவைக்கிறார். அதன்படி யார் வேண்டுமானாலும் தேவையான பாடத்தை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

எதிர்காலத்தில் இணையத்தின் மூலம் மட்டுமே கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் தற்போது கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும் தரச்சான்று முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. ஏப்.8ஆம் தேதி நடைபெறவுள்ள பல்கலைக்கழக மானியக்குழுக் கூட்டத்தில், தனியார் கல்லூரிகளுக்கு தரத்தின் அடிப்படையில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட மாற்றங்களைக் கொண்டுவரும் திட்டம் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment