தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 17, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயர்வு 01.01.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்

No comments:

Post a Comment