இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன !!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 11, 2016

இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன !!!

சென்னை மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது.தமிழகம், புதுச்சேரியில் இந்த தேர்வில் மட்டும் 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி
வருகின்றனர்.சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகளை சேர்ந்த 53 ஆயிரத்து 159 மாணவ மாணவியரும், புதுச்சேரியை சேர்ந்த 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரம் மாணவ மாணவியரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

தேர்வின் இறுதி நாளான இன்று சமூக அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் இம்மாத இறுதி வரை நடக்கும். மே 1-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை. வழக்கம்போல ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment