இந்த ஆண்டுக்குள் அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் கொண்டு வர மகாராஷ்டிர அரசு வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொதுமக்களுக்கு அம்மாநில அரசினால் வழங்கப்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட சேவைகள் ஆன்லைன் சேவையாக மாற்றப்பட்டுவிட்டன. வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 250-ஆக அதிகரிக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அரசு சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதற்காக விரைவில் பிரத்யேகமாக மொபைல் அப்ளிகேஷன் மற்றும் பணம் செலுத்துவதற்கு டிஜிட்டல் பேமண்ட் கேட்வே ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்காக, கிளவுட் டேட்டா சென்டர் ஒன்றை எக்ஸ்பிரண்ட் சப்போர்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.200 கோடி செலவில் துவங்கியுள்ளது மகாராஷ்டிர அரசு.
No comments:
Post a Comment