வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 25, 2016

வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்!!!

அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் களில் பழைய நோட்டுகள் வாங்குவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* வங்கியில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.

* வங்கியில் பழைய நோட்டுகளை கொடுத்து சில்லறை பெற முடியாது.

* இனி பழைய 500, 1000 நோட்டுகளை வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.

* பழைய நோட்டுகள் மூலம் பொது சேவைகள் பெற டிச. 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை பெட்ரோல் பங்க்குகள் மற்றும் மருத்துவமனைகளில் டிச. 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.

* தனிநபர்களுக்கான குடிநீர், மின் கட்டணம், மட்டும் பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம்.

* வெளிநாட்டினர் வாரம் ஒன்றுக்கு ரூ. 5000 வரை பணத்தை தங்களது பாஸ்போர்ட்டை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.

* மத்திய மாநில மாநகராட்சி பள்ளிகளில் ரூ 2,000 வரை பழைய நோட்டுகளை கொடுத்து கல்வி கட்டணம் செலுத்தலாம்.

* ரூ 500 பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி 500 ரூபாய் வரை பிரீப்பெய்டு டாப்அப் செய்து கொள்ளலாம்.

* டிச.3 முதல் சுங்கச்சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை கட்டணமாக செலுத்தலாம்

No comments:

Post a Comment