ஆன்டிராய்டு மொபைல் பயன்படுத்தும் இந்தியர்கள் ரகசியம் திருடப்படும் அபாயம்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 23, 2016

ஆன்டிராய்டு மொபைல் பயன்படுத்தும் இந்தியர்கள் ரகசியம் திருடப்படும் அபாயம்!!!

ஆன்டிராய்டு மொபைல் போன்களை பயன்படுத்தும் இந்தியர்களின் ரகசியங்கள் திருடப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரகசியங்கள் திருட்டு :

அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆய்வு கழகம் மற்றும் ேஹாம்லாண்ட் பாதுகாப்பு துறையும், கிரைப்டோவேர் என்ற பாதுகாப்பு நிறுவனத்துடன்
இணைந்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐந்தில் ஒருவர் சீன தயாரிப்பு ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் ஆன்டிராய்ட் டிவைசஸ் அமெரிக்க ஆன்லைன் நிறுவனங்களான அமேசான், பெஸ்ட்பை போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் கிடைக்கின்றன. இந்த டிவைஸ்கள் மூலம் இந்தியர்களின் டெக்ஸ்ட் மெசேஜ்கள், தொடர்பு எண்கள், அவர்களின் தொலைப்பேசி உரையாடல்கள், மொபைல் போனில் உள்ள பல்வேறு ரகசியங்கள் திருடப்பட்டு, சீன சர்வர்களுக்கு அனுப்படுகிறது.


சீனா அட்டகாசம் :

இந்த ரகசிய தகவல்கள் சீனா, 3 ம் நபருக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உளவு பார்க்கும் வேலைக்கு பின்புலமாக சீனாவின் ஷங்காய் அடப்ஸ் டெக்னாலஜி கோ லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுமார் 94 சதவீதம், அதாவது 250 மில்லியன் பேர் இத்தகைய ஆன்டிராய்ட் டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் இத்தகைய போன்களை பயன்படுத்துவோரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை :

டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இந்திய மக்களிடமும் சமீப காலமாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் டில்லியைச் சேர்ந்த மொபைல் டிவைஸ் மற்றும் இகோ சிஸ்டம் ஆய்வு கழகத்தின் நிபுணர் தருண் பதக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வாட்ஸ்ஆப் குரூப் வீடியோ காலிங்கை மூலமும் இத்தகைய திருட்டுக்கள் நடத்தப்படுவதால், வீடியோ காலிங் அழைப்புக்களை கவனமாக கையாள வேண்டும் என மக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment