அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 30, 2016

அரசு பள்ளிகளுக்கு 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்'

தமிழகம் முழுவதும் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தில் அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில்கழிப்பறைகள் பராமரிக்க துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.
இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவும், சிறப்பாக பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தவும் மாநில புதுமை நிதிமூலம் 'சைல்ட் பிரண்ட்லி டாய்லட்' திட்டத்தை செயல்படுத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.முன்னோடி திட்டமாக மாவட்டந்தோறும் சிறப்பாக கழிப்பறைகளை பராமரிக்கும் ஆறு பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும்.ஆண், பெண் கழிப்பறைகளுக்கு தனித்தனியாக 2 ஜன்னல்கள், கதவு, கை கழுவுமிடம், கண்ணாடி, சோப்பு, டவல், கழிப்பறை சுவர்களில் வண்ணமயமான சித்திரங்கள், தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு பள்ளிகளை தேர்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது.

No comments:

Post a Comment